Regional02

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை அம்மன் கோ ரதத்தில் எழுந்தருளி உள் வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளி த்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT