Regional02

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி வழங்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலாளர்சிவக்குமார் தலைமை வகித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 55 மாதங்களாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மாத ஊதியம் 20-ம் தேதிக்கு பின்னரே வழங்கப்படுகிறது. எனவே மாத ஊதியத்தை மாத இறுதி நாளில், அதாவது 1-ம் தேதிக்கு முன்பே வழங்க வேண்டும். கிராமப்புற சேவை, மலைப்பகுதி சேவைக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையான ரூ.30 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம் முழு ஆதரவு தெரிவிக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT