Regional01

கட்டுமான தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற கட்டுமானத் தொழி லாளர்கள் மற்றும் ஓய்வூதி யதாரர்களுக்கு இன்று(பிப்.15) முதல் பிப்.20 வரை இலவச வேட்டி, துண்டு மற்றும் சேலை விநியோகம் செய்யும் பணி நடைபெறுகிறது.

அரியலூர், செந்துறை வட்டங் களைச் சேர்ந்தவர்களுக்கு அரியலூர் ஒன்றிய அலுவலகத் திலும், ஆண்டிமடம், உடையார் பாளையம் வட்டங் களைச் சேர்ந்த வர்களுக்கு ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்திலும் இலவச வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் வழங்கப்படும். எனவே, பதிவு பெற்ற கட்டுமா னத் தொழிலாளர்கள், ஓய்வூதி யதாரர்கள், பதிவு அடையாள அட்டை அசல், ஆதார் அட்டை நகலுடன் சென்று இலவச வேட்டி, துண்டு, சேலைகளை பெறலாம் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT