Regional02

ஜல்லிக்கட்டில் 543 காளைகள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே முரட்டுசோழகம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டை கோட்டாட் சியர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 543 காளைகள் அவிழ்த்துவிடப்பட் டன.

காளைகளை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வக்கோட்டை போலீஸார் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT