Regional02

அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு களப்பயிற்சி

செய்திப்பிரிவு

மன்னார்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒப்பந்தப் பணியாளர்கள், மருத் துவமனையில் பயன்படுத்தும் ஊசிகளுடன் குப்பையை போட்டுவிடுவதால், அவை தங்களின் கைகளில் குத்தி காயமேற்படுவதாகக் கூறி, அங்குள்ள குப் பையை கையாள நகராட்சி தூய் மைப் பணியாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால், மருத்துவமனையின் பின்புறம் ஏராளமான குப்பை தேங்கியது.

இதையடுத்து, மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கமலா ஆகியோரின் வழிகாட்டலில், மன்னார்குடி ஆர்.பி.சிவம்நகர் பகுதியில் செயல்படும் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு அரசு மருத்துவ மனை ஒப்பந்தப் பணியாளர்கள் 20 பேர் அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இந் நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவமனை மருத்துவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். இந்த களப்பயிற்சி மூலம் மருத்துவமனையில் குப்பையை கையாளுவதில் இனி தொய்வு ஏற்படாது என பணியாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT