Regional01

மாவட்ட அளவிலான கேரம் போட்டி

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட கேரம் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட கேரம் கழகத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். விவேகானந்தா வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். போட்டியை திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கணேசராஜா தொடங்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT