புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் ராணுவ த்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் நடைபெற்றது.
முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவத்தினர் இணைந்து ‘தூத்துக்குடி ஜவான்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி, பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ஜவான்ஸ் அமைப்பின் சார்பில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வைகுண்டத்தில் நடைபெற்றது.
வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமை வகித்து, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி ஜவான்ஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் ராணுவத்தினர் மற்றும் வைகுண்டம் உதவி ஆய்வாளர் வசந்தகுமார், சமூக ஆர்வலர்கள் சந்துரு, ராமகிருஷ்ணன், பிச்சை கண்ணன் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.