Regional02

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 5,518 பெற்றோரின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 5,518 பெற்றோரின் செல்போன் எண்களுக்கு விழிப்புணர்வு குறுஞ்செய்தியை தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 2011 -ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2020-ம் ஆண்டில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 46,264 என தெரியவந்துள்ளது. இவர்களில், பெரும்பாலானவர்கள் கல்லூரிகளில் படிக்கும் நிலையில் உள்ளனர்.

வாக்களிக்க தகுதியான இவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 23,800 பேர் இடம் பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் அதிக இளம் வாக்காளர்களை சேர்த்த மாவட்டமாக வேலூர் பாராட்டுப் பெற்றது.

இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 20 ஆயிரம் இளம் வாக்காளர்களை யும் பட்டியலில் பெயர் சேர்க்கநடவடிக்கை எடுத்து வருகின்ற னர். இதன் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வித்துறை மூலமாக 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பிளஸ் 2 படித்த 6,330 மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

இதில், 5 ஆயிரத்து 518 பேரின் செல்போன் எண்களுக்கு ‘தங்களின் மகன், மகளின் பெயர் களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற உதவுங்கள்’ என்ற விழிப்புணர்வு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். மற்றவர்களின் செல்போன் எண்கள் மாறியுள் ளதால் அனுப்பவில்லை.

மேலும், www.nvsp.in இணையதளம் மூலமாக அல்லது தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங் கள் மூலமாக பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 20 ஆயிரம் இளம் வாக்காளர்களையும் பட்டியலில் பெயர் சேர்க்கநடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT