Regional01

இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்துக்கு இன்று (14-ம் தேதி) நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிகளுக்கான 33 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படுகிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் ஜனவரி 21-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான விண்ணப்பங்களுக்கு இன்று(14-ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுத்துத் தேர்வு நடைபெற இருந்தது. தற்போது இந்த எழுத்துத் தேர்வு நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிஅலகில் காலியாக உள்ள 23 பணிப் பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் 07.12.2020 அன்று மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலிப் பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நடக்க இருந்த எழுத்துத் தேர்வு, நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT