Regional02

பட்டாசு விபத்தில் உயிரிழப்பு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கொமதேக கோரிக்கை

செய்திப்பிரிவு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் இதுபோல விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT