Regional01

தலித் பேராயரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி - கடலூர் மறை மாவட் டத்திற்கு தலித் பேராயரை நியமிக்க கோரி விழுப்புரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி கடலூர் உயர் மறை மாநிலத்திற்கு 388 ஆண்டுகளில் ஒரு முறை கூட தலித் பேராயர் நியமிக்காததை கண்டித்தும், உடனடியாக தலித் பேராயரை நியமிக்கக் கோரியும் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் விழுப் புரம் கிறிஸ்து அரசர் ஆலயம் முன்புதலித் கிறிஸ்தவ விடுதலை இயக் கம் சார்பில் மாநிலத் தலைவர் மேரி ஜான் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கையில் பதாகைகளை ஏந்தி ஏராளமான தலித் கிறிஸ்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT