ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக இலவச அமரர் ஊர்தி வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் மோகன் வாழ்த்துரை வழங்கினார். தலைமை மருத்துவர் செந்தில் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ரெட்கிராஸ் செயலாளர் ராக்லைன்மதுரம், மருத் துவர் நெப்போலியன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.