Regional01

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஓய்வு அறை பாட்டாளி தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

செய்திப்பிரிவு

பேருந்து நிலையங்களில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த மண்டல அளவிலான பாட்டாளி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்க தருமபுரி மண்டல பொதுக்கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொது செயலாளர் ராஜா, பொருளாளர் மாதப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட பேரவை செயலாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களை, அரசு ஊழியர்களாக ஆக்குவது. மலைக் கிராமங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குளிர்கால பண பலன்கள் வழங்க வேண்டும். பேருந்து நிலையங்களில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய நிலுவை தொகை, சரண்டர் உள்ளிட்டவை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT