Regional02

இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட இடத்தில் கிராவல் மண் எடுப்பதை கண்டித்து சாலை மறியல்

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள கல்குழி கிராமத்தில் 2006-ம் ஆண்டு சிலருக்கு மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. அதில் சில வீட்டுமனைகளில் குடியிருப்புகள் உள்ளன. அங்கு சில குடியிருப்பு இல்லாத மனைகளில், கடந்த சில தினங்களாக சாலை பணிக்காக கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது.

இதையறிந்த அங்கு வீட்டு மனை பெற்ற மக்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கிராவல் மண் எடுக்கக் கூடாது எனக் கூறி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் கலை வாணன், உடையார் பாளையம் போலீஸார் மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT