Regional01

மூன்றாம் பாலினத்தவர் 26 பேர் ரேஷன் கார்டு கேட்டு மனு

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலு வலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், 18 வயது பூர்த்தியடைந்த மூன்றாம் பாலினத்தவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து, மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பெயர் நீக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாமில், மூன்றாம் பாலினத்தவர்கள் 26 பேர் மனு அளித்தனர்.

அவர்களில், 25 பேரின் மனுக்கள் இணைய தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஆதார் அட்டை இல்லாததால் ஒருவரது மனு மட்டும் பதிவேற்றம் செய்யப் படவில்லை.

SCROLL FOR NEXT