தாமிரபரணியில் தடுப்பணை கட்டுவதற்கு ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. 
Regional02

தாமிரபரணி ஆற்றில் ரூ.71.28 கோடியில் தடுப்பணைகள் கட்ட பூமிபூஜை

செய்திப்பிரிவு

தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடங்களான முக்காணி, சேர்ந்தபூமங்கலம், புன்னைக்காயல் பகுதிகளில் தடுப்பணை அமைக்க ரூ.46.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கடைமடை தடுப்பணைகள் 3 இடங்களில் தனித்தனியாக கட்டப்பட உள்ளன. முக்காணியில்172 மீட்டர் நீளம், புன்னைக்காயலில் 383 மீட்டர் நீளம், சேர்ந்த பூமங்கலத்தில் 162 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதனால், 2,976 ஏக்கர் பாசனவசதி பெறும். மேலும், இப்பகுதியில் கடல் நீர் உட்புகாமல் தடுக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். இதேபோல், ஆழ்வார்திருநகரி மற்றும் ஆழ்வார்தோப்பு கிராமங்களுக்கு இடையே ரூ.25.14கோடியில் தடுப்பணை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,522 ஏக்கர் பாசனவசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தடுப்பணை கட்டும் பணிகளைசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம், ஆழ்வார்தோப்பு ஆகிய இடங்களில் தடுப்பணை அமைய உள்ள இடத்தில் நடந்த பூமி பூஜையில் வைகுண்டம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோட்டாட்சியர் தனப்பிரியா, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித்தலைவர் நிவாசன் கலந்து கொண்டனர்.

முக்காணியில் 172 மீட்டர் நீளம், புன்னைக்காயலில் 383 மீட்டர் நீளம், சேர்ந்தபூமங்கலத்தில் 162 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட உள்ளது.

SCROLL FOR NEXT