காவல் ஆய்வாளர் புனிதா. 
Regional03

சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

வேலூரில் பல்வேறு குற்றச்சாட்டு களின் அடிப்படையில் சத்துவாச் சாரி காவல் ஆய்வாளர் புனிதாவை,ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளராக பணிபுரி பவர் புனிதா. சத்துவாச்சாரி பகுதியில் மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களுக்கு இவர் உடந்தை யாக இருப்பதாக புகார் எழுந்தது.மேலும், திருட்டு வழக்கில் தொடர் புடைய நபரை சத்துவாச்சாரி ரோந்து பிரிவு காவலர்கள் சில நாட் களுக்கு முன்பு பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால், அந்த நபரிடம் பணம் பெற்றுக்கொண்டு காவல் அதிகாரிகள் விடுவித்துள்ளனர். சில நாட்கள் கழித்து அதே நபரை ரோந்து காவல் துறையினர் மீண்டும் பிடித்துள்ளனர். விசாரணையில் பணம் பெற்றுக்கொண்டு விடுவித்த தாக கூறிய தகவல் காவல் துறை அதிகாரிகள் மட்டத்தில் சல சலப்பை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சினையில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவ லர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டனர். ஆய்வாளர் புனிதா மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களின் அடிப்படையில். அவரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT