Regional01

விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக 3 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா அறுவடை தொடங்க உள்ளது. ஏற்கெனவே வி.பகண்டை,நேமூர், கயத்தூர், குமுளம், முட்டத்தூர், நவமால்மருதூர், ஆனாங்கூர், காணைகுப்பம், கல்பட்டு, பனமலைப்பேட்டை, டி,புதுப்பாளையம், சித்தலிங்கமடம், தீவனூர், கிளியனூர், ஆவணிப்பூர் மற்றும் மேட்டுவயலாமூர் ஆகிய 16 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.மேலும் வெள்ளிமேடுபேட்டை, சத்தியமங்கலம், அரகண்டநல்லூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT