திருநெல்வேலி டவுனில் நேற்று முன் தினம் இரவு 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள 5 கோயில்களில் இருந்து கருடவாகனங்களில் பெருமாள் எழுந்தருளிய காட்சியை ஏராளமானோர் தரிசித்தனர். படம்: மு.லெட்சுமி அருண். 
Regional01

நெல்லை டவுனில் பஞ்ச கருட சேவை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுனில் பஞ்ச கருட சேவை வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள், கீழதிருவேங்கடநாதபுரம் வரதராஜ பெருமாள், திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கபெருமாள், லட்சுமி நரசிங்க பெருமாள், மகிழ் வண்ண நாதபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி டவுன் ரதவீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டவுன் தேரடி திடலில் 5 பெருமாள் சப்பரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பஞ்ச கருட சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்திருந்தனர். திருநெல்வேலி வாரி டிரஸ்ட் நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்தினர்.

SCROLL FOR NEXT