சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையொட்டி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ வழிபாட்டில் சிறப்பு அலங்காரத் தில் அம்மன். 
Regional01

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் நடைபெற்று வந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வழிபாடு, கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், 10 மாதங்களுக்குப் பிறகு தை அமாவாசை யையொட்டி ஊஞ்சல் உற்சவம் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந் தருளிய அம்மன், கோயிலை சுற்றிய பிறகு, ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தது. இதையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. அப்போது அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT