Regional02

கடலூர் கனரா வங்கி ரூ.15 கோடி சிறுதொழில் கடனுதவி

செய்திப்பிரிவு

கடலூர் கனரா வங்கி சார்பில் சிறு தொழில் கடன் உதவி வழங்கப்பட்டது.

திருப்பாதிரிப்புலியூர் கனரா வங்கி கிளையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளர் ராவ் தலைமை தாங்கினார். கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் பரிந்துரையின் பேரில் கடலூர் கனரா வங்கி சார்பில் சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வியாபார கடனாக 45 பேருக்கு ரூ.15 கோடி வழங்கப்பட்டது.

கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினர்.

மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர். வங்கி மேலாளர்கள் தண்டபாணி, ராமலிங்கம் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT