Regional02

ஆன்லைன் லாட்டரி விற்ற 12 பேர் கைது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அய்யம் பேட்டை ஹமீது(36), டன்கரம்பை சதீஷ்(40), பள்ளியக்ரஹாரம் ராமச்சந்திரன்(51), தஞ்சாவூர் கோவிந்தன்(42), சிவராஜ்(44), கார்த்தி(35), நடராஜன்(54), மதன்(37), பாலகிருஷ்ணன்(27), கும்பகோணம் கோவிந்தராஜ்(62), பாண்டியன்(54), வயலூர் வினோத்(28) ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT