Regional02

72 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்துள்ள செவ்வந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியசூசை(72). இவர், 2019-ம் ஆண்டு 3 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மரியசூசை மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட மரியசூசைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி சுந்தரராஜன் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT