தூத்துக்குடியில் கருப்பு வைரம் எனக் கூறிரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட முயன்றகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவரைபோலீஸார் கைது செய்தனர். அவர்களிடம்இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வைரம் போன்ற பொருளை ஆய்வுக்கு அனுப்ப எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் இருவர் போலி வைரத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தி 2 நபர்களை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடகாமாநிலம் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர்தின்னே பகுதியைச் சேர்ந்த சீதாராமன் மகன் அனந்தா (37) மற்றும் ஓசூர்பெஸ்தி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த தனுராம் மகன் வெங்கடேஷ் பாபு (45) எனத் தெரியவந்தது. இருவரும் கடந்த சிலநாட்களாக தங்களிடம் ரூ.27 லட்சம்மதிப்புள்ள கருப்பு வைரம் இருப்பதாகவும், அதனை வாங்கி விற்றால் நல்ல லாபம்கிடைக்கும் என்றும் கூறி தூத்துக்குடியில் உள்ள சில நகை வியாபாரிகள் மற்றும் தனி நபர்களை அணுகியுள்ளனர்.
இதுவரை யாரும் அதை வாங்க முன்வராத நிலையில் அவர்கள் முயற்சியைதொடர்ந்து வந்த போது போலீஸாரிடம்சிக்கிக் கொண்டனர். 425 கேரட் கருப்புவைரம் எனக்கூறி அவர்கள் விற்பனைக்குவைத்திருந்த, வைரம் போல் தோற்றம்கொண்ட பொருளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையின் போதுஅவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் வைரம் தொடர்பாக எந்த முறையான ஆவணங்களும் இல்லை. எனவே, அவர்கள் மோசடியில் ஈடுபட முயன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தென்பாகம்காவல் நிலையத்துக்கு வந்து, அந்தபொருளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பொருள் உண்மையிலேயே கருப்பு வைரம் தானா என்பது குறித்துகண்டறிய ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும், கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்துவிசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.