Regional01

இளம்பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

செய்திப்பிரிவு

தி.மலை அருகே இளம்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தி.மலை தென்றல் நகரில் வசிப்பவர் குமரன். இவரது மனைவி அபிராமி(32). இவர், திருக்கோவிலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பேருந்து மூலம் தி.மலை பேருந்து நிலையத்துக்கு நேற்று முன் தினம் இரவு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து கணவருடன் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

செல்வவிநாயகர் கோயில் அருகே சென்றபோது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், குமரன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். அடுத்த சில விநாடிகளில் அபிராமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை இருவரும் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து குமரன் கொடுத்த புகாரின் பேரில், தி.மலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT