Regional02

தனியார் நிறுவன பங்குதாரர் கொலைவழக்கில் சக பங்குதாரர் கைது

செய்திப்பிரிவு

தொழில் ரீதியாக ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் இணைந்து தொழில் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஜனவரி 1-ம் தேதி திருப்பூர் ரங்கநாதபுரம் 3-வது வீதியில் தனியார் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

நிறுவனத்தை தொடங்க அரவிந்த் பண முதலீடு செய்துள்ளார், மூர்த்தி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் லாபத் தொகை கணக்கு காட்டவில்லை என இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிப்.9-ம் தேதி நிறுவனத்துக்கு தன் நண்பர் ஒருவருடன் வந்த மூர்த்தி, அரவிந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் மூர்த்தியின் கழுத்தை கத்தியால் அறுத்து அரவிந்த் கொலை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற ஆய்வாளர் கணேசன் தலைமையிலான வடக்கு காவல் நிலைய போலீஸார், மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரவிந்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT