கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட பல் மருத்துவர்கள். 
Regional01

அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவ பணியிடங்களை நிரப்புக கள்ளக்குறிச்சியில் மருத்துவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனைகளில் காலிபணியிடங்களை நிரப்பக்கோரி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பல் மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல் மருத்துவ சங்கத் தலைவர் செல்வக்குமரன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அருண்குமார், விஸ்வநாதன், சுரேந்தர், சாந்தி, ரேகா, வெங்க டேசன், அபுதாகீர், வினோத் உள்ளிட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல் மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆயுர்வேத மருத்துவர்களும் பல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கும் மத்திய அரசின் கலப்பு மருத்துவ ஆணையை திரும்பப் பெற வேண்டும். பெருகி வரும் பல் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப் படுத்தும்வகையில் அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் 400 பல் மருத்துவர்களின் தற்காலிக பணி யை நிரந்தரமாக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியாக உள்ள பல் மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக 8 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் மருத்துவ பணியாளர் ஆணைய தேர்வினை உடனே நடத்த வேண்டும். பல் மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்தி மக்களுக்கு பல் மருத்துவ சேவை தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT