Regional01

கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் முப்பெரும் விழா

செய்திப்பிரிவு

பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புல கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். இதில், நேற்று தொடங்கி 17 நாட்கள் நடைபெறும் மாசு கண்காணிப்பு நீர் மாசுபடுதல் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து. கடல் அருங்காட்சிய பயிற்சி கையேட்டை வெளியிட்டார். முன்னாள் மாணவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். மையத்தின் முதல் இயக்குநர் பேராசிரியர் சேஷய்யா உருவசிலைக்கு மாலை அணிவித்து அவருடைய உழைப்பும், சாதனையும் நினைவு கூறப்பட்டது.

SCROLL FOR NEXT