Regional01

உளுந்து சாகுபடி பயிற்சி

செய்திப்பிரிவு

கடலூர் வட்டாரம் சங்கொலிக் குப்பம் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (பயறு) சார்பில் நேற்று பயிர் சாகுபடி பயிற்சி நடைபெற்றது. கடலூர் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) ரமேஷ் பயிற்சியை தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

உயிர் உரங்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு குறித்து விளக்கி பேசினார். வேளாண் உதவி இயக்குநர் பூவராகன், தீவிர உளுந்து சாகுபடியின் முக்கிய தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி, உயிர் உரங்கள் பயன்பாடு குறித்து விளக்கினார். இப்பயிற் சியானது நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT