Regional01

ராமநாதபுரம் அருகே பைக்குகள் மோதி இருவர் மரணம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை அருகேயுள்ள ஆண்டித்தேவன் வலசையைச் சேர்ந்த நல்லமுத்து மகன் கரண் (19). நேற்று காலை இவர் தனது சகோதரியை, முத்துப் பேட்டையில் உள்ள கல்லூரியில் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பூச்சிவலசை எனும் இடத்தில் சென்றபோது, பருத்திக்காட்டுவலசையைச் சேர்ந்த விவசாயி பால்பாண்டி (61) என்பவர் வந்த பைக் மீது மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். திருப்புல்லாணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT