Regional01

1999-ல் வழங்கிய பட்டாவுக்கு இடம் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வானதிரையான்பட்டினம் ஆதிதிராவிடர் காலனி தெரு மக்கள் 98 பேருக்கு கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.

ஆனால், இதுவரை பட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்கவில்லை. எனவே, பட்டாவுக்கான நிலத்தை உடனடியாக அளந்து கொடுக்க வேண்டும் எனக் கோரி, வானதிரையான்பட்டினம் ஆதிதிராவிடர் காலனி தெரு மக்கள் உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT