Regional01

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

5 ஆண்டுகளாக பஞ்சப்படி உயர்வு வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக கரூர் மண்டல அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

கரூர் மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் மற்றும் பென்ஷனர்ஸ் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கே.பன்னீர்செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் ஆ.க.சகாதேவன், மகளிர் அணி நாகலட்சுமி, துணைச் செயலாளர் பி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT