Regional01

அஞ்சலக ஊழியர்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

ஜெயங்கொண்டம் நான்கு சாலையில் தலைமை அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து வாகனத்தில் வரக்கூடிய அஞ்சல்களை அலுவலகத்தின் முன்பு நிறுத்தி இறக்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று அஞ்சல் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த உடையார்பாளையம் காவல் ஆய்வாளர், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தியிருப்பதாக கூறி, அஞ்சல் அலுவலக ஊழியர்களை கண்டித்து சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அஞ்சலக ஊழியர்கள் காவல் ஆய்வாளரின் செயலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸார், அஞ்சலக ஊழியர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.

SCROLL FOR NEXT