Regional02

வேலூரில்நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வேலூரில் நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகீல் (13). இவர், அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக நேற்று மாலை ஷகீல் சென்றபோது, நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வந்த தகவலின் பேரில் பாகாயம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மாணவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT