சேலம் வந்த விரைவு ரயிலில் ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட அந்த 3.141 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சேலம் ரயில் நிலையத்தில் சென்னை-சேலம் விரைவு ரயிலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ராஜஸ்தானைச் சேர்ந்த பாகீரத், சிவராஜ் ஆகிய இருவரிடமும் 3 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் இருந்ததை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் இருந்து நகைகளை சேலத்துக்கு விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். நகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.41 கோடி. இருவரிடமும் போலீஸார் விசாரிக்கின்றனர்.