Regional02

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசுப் போக்கு வரத்துக் கழக ஏஐடியுசி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் மல்லி.ஜி.தியாகராஜன் தலைமை வகித்தார்.

இதில், அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 63 மாத கால அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகையை ஓய்வூதியத்துடன் இணைத்து, உயர்த்தி வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 2020 ஜனவரி முதல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணிக்கொடை, பி.எப், விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பணப் பலன்களை உடன் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தமிழக அரசு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சங்க பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன், நிர்வாகிகள் எம்.மாணிக்கம், கே.சுந்தரபாண்டியன், மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை, கவுரவத் தலைவர் ஜே.சந்திரமோகன், போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில், ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.

SCROLL FOR NEXT