தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று நேரடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலு வலர் அரவிந்தன், வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின், நுகர் பொருள் வாணிபக் கழக முது நிலை மண்டல மேலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டதின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், புதிய வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியவாறு கூட்டத்திலிருந்து சிறிதுநேரம் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தமிழக அரசு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததை வரவேற்று, ஆட்சியர் உள்ளிட்டோருக்கு இனிப்பு வழங்கினர்.
கூட்டத்தில் பேசிய விவசா யிகள் கூறியது: தமிழக அரசு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததுபோல, தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர், நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். முறையாக கடன்களை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு திட்டம் எனக் கொண்டு வந்து, பல்வேறு சலுகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். கடன் தள்ளுபடியில் பலன் பெற்றவர்களின் விவரங்களை இணையதளம் மற்றும் அந்தந்த சங்கங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
சம்பா சாகுபடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், கோடை சாகுபடிக்கு குறைந்தது 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெறு வதையும், 40.580 கிலோவுக்கு பதிலாக 41 கிலோ எடை வைத்து கூடுதல் நெல் எடுப்பதையும் தடுக்க வேண்டும். பல இடங்களில் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பற்றாக்குறையை போக்க வேண்டும். அறுவடை இயந்திரங் களுக்கான கூடுதல் வாடகை வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் ஜமாபந்தியின்போது வழங்கப்பட்ட மனுக்களுக்கு இதுவரை பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை.
உற்பத்தி செலவு அதிகரிப்ப தால், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு உரிய இழப்பீடு, நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தனர்.