Regional02

கல்லூரி மாணவர் தற்கொலை

செய்திப்பிரிவு

திருவாரூரை அடுத்த வேப்பத் தாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசனின் மகன் கார்த்திக்(19). இவர். மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

கார்த்திக்கின் தாயார் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், இவரை வளர்த்து வந்த பாட்டி 3 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த கார்த்திக், கடந்த 3 மாதங்களாக மருத்துவ மனையில் மன உளைச் சலுக்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 2 நாட்க ளுக்கு முன் கார்த்திக், பூச்சி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT