Regional01

மகா சிவராத்திரியை முன்னிட்டு நவஜோதிர்லிங்க யாத்திரை ரயில்

செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகா சிவராத்திரி விழா மார்ச் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக, நவ ஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள திரிம்பகேஷ்வர், பீமாசங்கர், க்ரிஷ்னேஸ்வர், அந்தநாக்நாத், பார்லி வைஸ்நாத், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத், மத்திய பிரதேசத்திலுள்ள ஓம்காரேஷ்வர், உஜ்ஜெயின் மகாகாலேஸ்வர் மற்றும் ஆந்திராவில் உள்ள சைலம் மல்லிகார்ஜுனர் ஆகிய ஒன்பது ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக் கும் வகையில் 13 நாட்கள் சுற்றுலா திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் மார்ச் 8-ம் தேதி திருநெல்வேலியில் புறப்பட்டு, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை, பெரம்பூர் வழியாக செல்லும். ரயில் கட்டணம், மூன்று வேளையும் சைவ உணவு, யாத்திரை தலங்களில் தங்கும் வசதி சேர்த்து நபர் ஒன்றுக்கு ரூ. 15,350 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 82879 31977, 82879 31964 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT