Regional02

காங்கயம் அருகே 20-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765கிலோ வாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோரம் புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர் மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் காங்கயம் அருகே படியூரில் 20-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT