விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அனந்தபுரம் பொதுமக்கள். 
Regional02

அனந்தபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?

செய்திப்பிரிவு

அனந்தபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அனந்தபுரம் பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பது:

அனந்தபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் போதுமான இட வசதி இல்லாததால் இதுநாள்வரை அமைக்க இயலவில்லை. எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத வேளாண்துறையின் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. அதே பகுதியில் பழுதடைந்த பள்ளிக்கட்டிடமும் உள்ளது. இதன் அருகே காலி இடமும் உள்ளது. பழுதடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு, அந்த இடத்தை மின் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT