புவனகிரி பகுதி வெள்ளாற்றில் தேங்கியுள்ள குப்பைகள். 
Regional02

புவனகிரி வெள்ளாற்றில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

செய்திப்பிரிவு

புவனகிரி பகுதி வெள்ளாற்றில் தேங்கியுள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர்மழை காரணமாக வெள்ளாற்றில் அதிகப்படியான வெள்ளநீர் வெளியேறியது. அப்போது மழைநீரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், துணிகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் அடித்து வரப்பட்டன. அந்த குப்பைகள் புவனகிரி பகுதி வெள்ளாற்று பகுதியில் உள்ள புதர்கள், சிறு மரங்களில் தேங்கி படிந்து விட்டன.

தற்போது மழை நீர் வடிந்த பிறகும் ஆற்றில் குப்பைகள் மட்டுமே தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடும், சுற்றுப்புற சூழல் பாதிக்கும் நிலையும் உள்ளது. இதனால் மண்வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படையும். எனவே பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT