Regional02

நலிவுற்ற கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும்: முத்தரசன்

செய்திப்பிரிவு

திருக்கோவிலூரில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசியது:

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் போராடி வரும் சூழலில் இவைகளை கருத்தில் கொள்ளாமல் பிரதமர் இருப்பது சரியல்ல. இதனால் நாட்டின்உணவு பாதுகாப்பு கேள்விக்குறி யாகும். இச்சட்டத்தை மத்திய அரசுதிரும்பப் பெற வேண்டும். தேர்தலை முன்னிட்டே தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிக்கப்பட்டுள்ளது. நலிவுற்ற கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ வி சரவணன், மாவட்ட செயலாளர் கே.எஸ்.அப்பாவு,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT