சேலம் டாக்டர் சுதாகர் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவமனை சார்பில் இலவச செவித்திறன், பேச்சுத் திறன் பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
இரு நாட்கள் நடைபெற்ற முகாமில், சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நோயாளிகள் 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர். மேலும், குழந்தைகளுக்கு இலவச பேச்சு, குரல் மாற்றம் பயிற்சி அளிக்கப்பட்டன.
சலுகை விலையில் காது கருவிகள், சிறப்பு எக்ஸ்சேஞ் ஆஃபர் புதிய சார்ஜபிள் காது கருவிகள் வழங்கப்பட்டது. இதில், சார்ஜ் செய்யும் வசதி உள்ள காது கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
முகாமில், டாக்டர் சுதாகரன், தீபா சுதாகரன், மேலாளர் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்று நோயாளிகளுக்கு பயிற்சி மற்றும் மருத்துவப்பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கினர்.