Regional01

இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு இம்னாம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகேசன்(32). இவர், கடந்த 2019-ல் வடக்கு இம்னாம்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்பவரை அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கணேஷ்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்ப ளித்த நீதிபதி எம்.ஜியாவுர் ரகுமான், குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT