அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி யில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைப்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாலை பணி நடைபெறும் இடங்களில் போதுமான தண்ணீர் தெளிக் காததால், வாகனங்கள் செல்லும்போது அதிகளவிலான புழுதி பறந்து, உணவு, ஜவுளி, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகள் மீதும் படர்ந்து விடுகிறது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையில் புழுதி பறக்கா வண்ணம் போதிய தண்ணீரை தெளிக்க வேண்டும் என வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கயர்லாபாத் போலீஸார், நெடுஞ்சாலைத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை ஒப்பந்ததாரர்களிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.