Regional01

அரியலூரில் ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

அரியலூர் அண்ணாசிலை அருகே நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவுடன் குடியிருப்புகளை கட்டித் தரவேண்டும். தினக் கூலி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் வார விடுமுறை, அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு வழங்காத அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகங்களை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர், கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்க உள்ளாட்சித் துறை மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை வகித்தார். அரியலூர் நிர்வாகி மாரியப்பன், ஜெயங்கொண்டம் நிர்வாகி தம்பிசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT