Regional01

தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

செய்திப்பிரிவு

தென்காசி அருகே உள்ள மேலகரம், ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (53). இவர், திப்பணம்பட்டி அரசுபள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இவாஞ்சலின் செங்கோட்டை அரசு பள்ளியில்ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள், மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அதற்குள், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருந்தன. குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT