சரண்யா அரி. 
Regional02

மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் உறுதி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜெயசீலன், சென்னை சர்வே மற்றும் நில ஆவணம் பிரிவு கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த சரண்யா அரி, தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

சரண்யா அரி நேற்று காலைதூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்து, புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஜெயசீலன் ஒப்படைத்தார்.

சரண்யா அரி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2016-ம்ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது கணவர் விஷ்வேஷ் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காவல் துறை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சரண்யா அரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநகராட்சி பகுதியில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முழு முயற்சி எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT