சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதில், ஆண்டாளுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்த பெருமாள். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை அணிவிப்பு

செய்திப்பிரிவு

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் 41-வது ஆண்டு பஞ்ச கருட சேவை உற்ஸவம் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அம்மாப்பேட்டை  பாவ நாராயணசாமி கோயில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில், 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோயில், கோட்டை அழகிரிநாதர் கோயிலில் கருடசேவை உற்ஸவம் விமரி சையாக நடந்தது.

தொடர்ந்து, கோட்டை அழகிரிநாதர் கோயிலில் நேற்று முன்தினம்  ஆண்டாள் திருக் கல்யாண உற்ஸவத்துக்காக திருமண சீர்வரிசைகளுடன்  ஆண்டாள் புறப்பாடு கோயில் உள் பிரகாரத்தில் நடந்தது. பின்னர் ஆண்டாளுக்கு தீபாராதனை, சாற்றுமுறை வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. முதல் உற்ஸவமாக, அழகிரிநாதர், ஆண்டாளுக்கு திருமஞ்சனமும் தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்களுடன் கோயில் பிரகாரத்தில் உள்புறப்பாடு வந்தனர். பின்னர் கோயில் மண்டபத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கு திருக்கல்யாண அலங்காரம் நடந்தது.

வில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையானது அழகிரிநாதருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு இடையில் திருக்கல்யாண உற்ஸவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

SCROLL FOR NEXT